2.8.11

PGBEA - PGBOU circular 1.8.2011


பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் சங்கம்
(360/RMD) (இணைப்பு: AIRRBEA, NFRRBE & BEFI)
பாண்டியன் கிராம வங்கி ஆபிஸர்ஸ் யூனியன்
(144/KMR) (இணைப்பு: AIRRBEA & NFRRBO)


_________________________________________________________
website: www.pgbea.net    email: gspgbou@gmail.com , pgbea.vnr@gmail.com
_________________________________________________________

சுற்றறிக்கை எண் : 4/2011                                          நாள்: 14.7.2011

அருமைத் தோழர்களே!
வணக்கம்.


ஆகஸ்ட் 3ம் தேதி நமது வங்கியில் புதிதாகப் பணிநியமனம் செய்யப்பட்ட ஆபிஸர்களும், ஆபிஸ் அசிஸ்டெண்ட்களும் பணியில் சேர இருக்கின்றனர்.   புதிய ஆபிஸர்களுக்கு கிளைகளில் ஒரு மாதம்  training  என்றும், புதிய Office assistant களுக்கு தலைமையலுவலகத்தில் வைத்து  இரண்டு Batchகளாக  training கொடுத்த பிறகு கிளைகளில் posting செய்யப்படுவர் என்றும் சொல்லப்படுகிறது. புழுக்கங்களும்,நெருக்கடிகளும் வாட்டுகின்ற ஒரு முக்கிய தருணத்தில் அவர்கள் புதிய காற்றாக வருகின்றனர்.  ஒரு தலைமுறை இடைவெளி விட்டு,இளம் ரத்தமாக வருகின்றனர். இந்தச் செய்தி நம் அனைவருக்கும், உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் தருகிறது. அவர்களை வாழ்த்துவோம். வரவேற்போம். நமது அனுபவமும், அவர்களின் ஆற்றலும் இந்த வங்கிக்கும், நமது இயக்கத்திற்கும் வலிமை சேர்க்கும்.


மேலாளர்கள் கூட்டத்தில் நாம்!


மண்டலவாரியாக சமீபத்தில் நடந்த மேலாளர்கள் கூட்டங்களில் தொழிற்சங்கப் பிரதிநிதிகளையும் ஆலோசனைகூற நிர்வாகம் அழைத்திருந்தது. இது ஒரு ஆரோக்கியமான நடைமுறையாகவே நாம் கருதுகிறோம்.  சேர்மன் அவர்கள்,  நடந்து முடிந்த காலாண்டு (ஏப்ரல் - ஜூன் 2011) கணக்கில், நமது டெப்பாசிட் குறைந்திருப்பதைச் சுட்டிக்காட்டி, அதன் விளைவுகளையும், தாக்கங்களையும் எடுத்துரைத்தார்.  Advancesல் jewel loanகளே அதிகமாய் இருப்பதையும், 86 சதவீதமாக இருக்கும் அதனை 75 சதவீதமாக குறைக்க வேண்டும் என்பது நமக்கு இலக்கு என்பதையும் எடுத்துரைத்தார். இதன் அர்த்தம் நகைக்கடனை குறைக்க வேண்டும் என்பதல்ல, மற்ற கடன்களை, குறிப்பாக easy loan போன்றவைகளை அதிகரிக்க வேண்டும் என்பதே என தனது நிலைபாட்டை தெளிவு படுத்தினார்.  Branch managerகள் வெளியே செல்ல வேண்டும், canvass  செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.


நம் தரப்பில் பேசும்போது, இதுபோன்ற கூட்டங்களில் தொழிற்சங்கப் பிரதிநிதிகளை அழைக்க வேண்டும் என நிர்வாகத்திற்கு தோன்றியதற்கு,  சேர்மனுக்கு நன்றியும், பாராட்டுக்களையும் தெரிவித்தோம்.  இந்தக் கூட்டம் one way traffic போல இருப்பதாகவும், வெளிப்படையான உரையாடல்கள் தேவை என்பதையும் நம் தரப்பில் சுட்டிக்காட்டினோம். Managerகளே ground levelல் பணிபுரிந்து அதன் கஷ்ட நஷ்டங்களை உணர்ந்தவர்கள் என்றும், இலக்குகளை விஞ்ஞான பூர்வமாக வடிவமைக்க வேண்டியவர்கள் நிர்வாகம் என்றும், இந்த இருமுனைகளும் சந்தித்து தீர்வு கண்டு, மேலும் முன்னேறும் இடமாக managers மீட்டிங் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினோம்.  பணிநிறைவின் போது எப்போதோ கொடுத்த கடன்களை காரணம் காட்டி, ஓய்வூதியத் தொகைகளை பிடித்தம் செய்வதால்,  அலுவலர்கள் மத்தியில் ஒரு பயம் விதைக்கப்படுவதையும் எடுத்துச் சொன்னோம். நிர்வாகத்தரப்பில் transparencyயும்,  impartialityயும் இருக்கவேண்டும் என கேட்டுக்கொண்டோம்.  இந்த குறிப்பிட்ட காலாண்டில் ஆள் பற்றாக்குறையாலும்,  பணி நெருக்கடியாலுமே வாடிக்கையாளர் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டதையும் அதுவே, வங்கியின் வளர்ச்சிக்கு தடைகல்லாக இருந்ததையும், புதிய Recruitment மூலம் அந்த நெருக்கடி ஒரளவுக்கு தீர்ந்து போக இருப்பதால், நாம் இலக்குகளை அடைய சாத்தியங்கள் அதிகமாகி இருக்கின்றன எனவும் நம்பிக்கை தெரிவித்தோம்.


டிரான்ஸ்பர்கள்:


திறக்கப்பட்ட புதிய கிளைகளில் தோழர்கள் கலைச்செல்வன் (புதுக்கோட்டை), தங்கராஜ் (சிங்கம்புணரி), சந்திரசேகர் (காரைக்குடி) ஆகியோரை மாறுதல் செய்தது சரியல்ல என்றும், அவைகளை மாற்றித்தர வேண்டுமெனவும் நாம் வலியுறுத்தி வந்தோம்.  டிரான்ஸ்பர் கமிட்டியில் பேசினோம். “அவர்கள் புதியகிளையில் ஜாய்ன் பண்ணச் சொல்லுங்கள். டிரான்ஸ்பர்களை மாற்றித் தருகிறோம்”என்றார் சேர்மன். நமது தோழர்களும் அதுபோலவே ஜாய்ன் செய்தனர். சொன்ன மாதிரி, இப்போது அந்த மூன்று தோழர்களுக்குமே அவரவர்களின் பழைய கிளைகளுக்கு நிர்வாகம் டிரான்ஸ்பர்களை மாற்றித் தந்திருக்கிறது. சேர்மன் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


புதிய கிளரிக்கல் தோழர்களுக்கு டிரெயினிங் முடிந்ததும்,  அவர்களுக்கு கிளைகள் ஒதுக்கப்பட்டு மாறுதல் செய்யப்படுவார்கள். அதுசமயம் ஏற்கனவே பாதிப்புகளுக்குள்ளான அனைத்து டிரான்ஸ்பர்களும், மெஸஞ்சரிலிருந்து கிளரிக்கலாக பதவி உயர்வு பெற்றதையொட்டி தொலைதூரங்களுக்கு போடப்பட்ட டிரான்ஸ்பர்களும் சரிசெய்யப்படும் என நிர்வாகம் உறுதியளித்திருக்கிறது. மிகுந்த நம்பிக்கையோடு எதிர்பார்க்கிறோம்.


ஆகஸ்ட் 5ம் தேதி அகில இந்திய வேலைநிறுத்தம்:


ஏற்கனவே ஜூல7ம் தேதி நடக்க இருந்த நமது அகில இந்திய ஒருநாள் வேலைநிறுத்தம், பாராளுமன்றக் கூட்டத்தொடரையொட்டி ஆகஸ்ட் 5ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு இருந்ததைத் தெரியப்படுத்தி இருந்தோம்.  திட்டமிட்டபடி, ஆகஸ்ட் 5ம் தேதி, வங்கித்துறையின் எதிர்காலம் கருதியும், வங்கிஊழியர்கள் நலன் கருதியும் நாம் இப்போது அகில இந்திய ஒருநாள் வேலைநிறுத்தத்தில் கலந்துகொள்ள இருக்கிறோம்.  இந்த வேலைநிறுத்தத்தில், கிராம வங்கி ஊழியர்களின் மிக முக்கிய கோரிக்கையான பென்ஷனும் இணைக்கப்பட்டுள்ளது. ‘பென்ஷனுக்காக எந்தவித தியாகத்தையும் செய்யத் தயாராக இருப்போம்’என வெறும் வார்த்தைகளால் சர்க்குலர் போட்டுவிட்டு, இந்த வேலைநிறுத்ததில் கலந்துகொள்ளாமல் வேடிக்கை பார்ப்பவர்கள் நாமல்ல. 


வங்கித்துறையை தனியாருக்கு வார்க்கும் அரசின் முயற்சிகளை எதிர்க்கிற போராட்டம் இது. இருதரப்பு ஊதிய ஒப்பந்தங்களை காலாவதியாக்கும் சதிகளுக்கு எதிரான போராட்டம் இது. Business coreespondents என்னும் பேரில் outsourcing  செய்து பெரும் உழைப்புச் சுரண்டலுக்கு துணைபோகும் சூழ்ச்சிகளுக்கு எதிரான போராட்டம் இது. லாபத்தோடு பென்ஷனையும் சம்பந்தப்படுத்தி, வங்கி ஊழியர்களின் எதிர்காலத்தோடு விளையாடுகிற அரசின் கொள்கைகளுக்கு எதிரான போராட்டம் இது. மேலும் பணி நேரத்தை அதிகரித்து, வங்கி ஊழியர்களின் முதுகெலும்பை முறிக்கிற கொடுமைக்கு எதிரான போராட்டம் இது.


பெற்றதை நாம் ஒருபோதும் நாம் இழந்திடலாகாது. வாருங்கள் தோழர்களே! மகத்தான இந்த காரியத்தில் நாம் நம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வோம்.


ஆகஸ்ட் 5ம் தேதி ஒருநாள் வேலைநிறுத்ததை வெற்றிகரமக்குவோம்.


தோழமையுடன்


(M.சோலைமாணிக்கம்)                                                 (T.சங்கரலிங்கம்)
பொதுச்செயலாளர் - PGBEA                            பொதுச்செயலாளர் - PGBOU