Powered by Blogger.
 

Posting of First Batch of New Clericals on 8.10.2014

1 comments

2013ம் ஆண்டிற்குரிய கிளரிக்கல் புதிய பணி நியமனம் நடந்து முடிந்திருக்கிறது. அதன் முதல் batch ஆக 34 பேர் 7.10.2014 அன்று தலைமையலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு இருந்தனர். அதில் 27 பேர் வந்திருந்தனர். இரண்டு நாள் பயற்சிக்குப் பிறகு அவர்களுக்குரிய கிளைகள் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. அந்த அட்டவணையை கீழே தந்திருக்கிறோம்.

அடுத்த Batch -ஆக 34 பேர் 9.10.2014 அன்று தலைமையலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு இருக்கின்றனர். அவர்களுக்குரிய கிளைகள் 11.10.2014 அன்று அறிவிக்கப்படும்.

கடைசி  Batch -ஆக 34 பேர் 13.10.2014 அன்று தலைமையலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு இருக்கின்றனர். அவர்களுக்குரிய கிளைகள் 15.10.2014 அன்று அறிவிக்கப்படும்.

அதையொட்டி, இந்த வருடத்திற்குரிய கிளரிக்கலுக்கான பொது மாறுதல்கள் அறிவிக்கப்படும்.

புதிய தோழர்களை, நமது இளம் சொந்தங்களை வாழ்த்தி வரவேற்போம்!

Posting of New clerks on 8.10.2014

S.No
R.No
Name
Branch
1
1580
Rajalakshmi.M
Thiruppuvanam
2
1581
Susitha.S
Ittamozhi
3
1582
Faustus Leo. J
Perunazhi
4
1583
Rajanandhini.R
Madagupatti
5
1584
Sindhiya Karthikeyan
Karaikudi
6
1585
Pinky.J
Sayalkudi
7
1586
Divya.S
Kadayam
8
1587
Saranya.S
Thirupundi
9
1588
Maheswaran.S
Kalayarkoil
10
1589
Vidhya Lakshmi.S
Singampuneri
11
1590
Sivaranjanai.R
Bodinaickanur
12
1591
Hajimuthunissa.K
Thirupundi
13
1592
Ramamoorthy
T.U.Mangai
14
1593
Nathiya.K
Ayyampettai
15
1594
Iswarya.J
Vembar
16
1595
Velammal.G
NGO Colony
17
1596
Rajeswari.H
Thirumangalam
18
1597
Maheswaran.P
Rayavaram
19
1598
Maheswari.M
Ramnad –T
20
1599
Amala.A
Thiruppuvanam
21
1600
Lavanya.T.K
Periyakulam
22
1601
Thenkumar.G
Pottagavayal
23
1602
Sasi Porkodi.K
Manaloor
24
1603
Bhuvaneswari
Sankarankoil
25
1604
Sreedevi.S
Veerasigamani
26
1605
Jenitta Priya Dharshini
S.V.Karai
27
1606
Vignesh.G
Thiruvadanai
Read more...

மொட்டைகளின் ராஜ்ஜியம்!

0 comments

பொதுவான பிரச்சினைகளை முன்வைத்து இந்த வங்கியில் அனைத்துச் சங்கங்களும் ஒன்றிணைந்து செயல்படுவது என்ற இணக்கம் ஏற்பட்ட சமயத்தில், வங்கியின் உயரதிகாரிகளை கடுமையாகத் தாக்கியும் இழிவுபடுத்தியும் ஒரு மொட்டைக் கடிதம் வந்திருப்பதாக நிர்வாகத் தரப்பில் முதன்முதலாகச் சொல்லப்பட்டது. வங்கியின் உயரதிகாரிகள் மிகுந்த வேதனைக்கும், மன உளைச்சலுக்கும் உள்ளாகி இருப்பதாகவும் சொல்லப்பட்டது.

“மொட்டைக் கடிதங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம். நாம் உண்மையாகவும், நேர்மையாகவும் இருக்கும் பட்சத்தில், இவைகளை புறந்தள்ளி விடலாம்” என நாம் பொதுவாகச் சொன்னோம்.

அதன்பிறகு, அவ்வப்போது “இப்போது ஒரு மொட்டைக் கடிதம் வந்திருக்கிறது”, “இரண்டு நாளைக்கு முன்பு ஒரு மொட்டைக் கடிதம் வந்திருக்கிறது”, “எதையெடுத்தாலும் மொட்டை போட்டா, என்ன செய்றது?” என்று  நிர்வாகத் தரப்பில் சொல்லி வருத்தப்படுவதும் கையைப் பிசைவதும் தொடர்ந்தது.

நமது பிரச்சினைகளைப் பேசச் செல்கிற நம்மிடம், நிர்வாகம் தனது பிரச்சினையாக ‘மொட்டை’களை பேசியது. “உங்களில் ஒருவர்தான் இதனைப் போடுகிறார்கள்” என நம்மிடம் இருக்கும் ஒற்றுமையை குலைக்கும் வார்த்தைகளை நிர்வாகம் ஒருநாள் உதிர்த்தது.

நாம் அதனை ஒப்புக் கொள்ளவில்லை. மொட்டைப் போடும் வழக்கத்தை நாம் கண்டிப்பதாகவும், நிர்வாகம் அவைகளை கணக்கிலெடுக்க வேண்டாம் என்றும் சொன்னோம். “நமக்கு மட்டும் போட்டால் பரவாயில்லை, ஐ.ஓ.பிக்கு, நபார்டுக்கு, ரிசர்வ் வங்கிக்கு எல்லாம் போடுகிறார்கள், அங்கிருந்து கமெண்ட்ஸ் கேட்கிறார்கள். என்ன செய்ய” என புலம்பத் தொடங்கியது நிர்வாகம்.

சமீபத்தில், இந்த ‘மொட்டை’யின் பாதிப்பு வேறு விதமாக உருவெடுக்க ஆரம்பித்திருக்கிறது. ஒரு தோழரின் அப்பீல் குறித்து பேசினோம். “என்ன செய்ய அது சம்பந்தமாக ஒரு மொட்டை வந்திருக்கிறது” எனச் சொல்லப்பட்டது. ஓய்வு பெற இருக்கும் ஒரு தோழருக்கு பாதிப்புகள் வந்துவிடக் கூடாது என்று பேசினோம். “அதற்கும் ஒரு மொட்டை வந்திருக்கு. என்ன செய்ய” என நிர்வாகம் தனது ‘மொட்டை’ பல்லவியைப் பாடியது!

ஒரு சமயத்தில் மொட்டைகளை தன்னைத் தாக்கும் ஆயுதங்களாக பாவித்த நிர்வாகம், இப்போது தன்னைப் பாதுகாக்கும் கவசங்களாகவும், கேடயங்களாகவும் புனரமைத்துக் கொண்டிருக்கிறது. இதற்குப் பிறகும் ‘மொட்டை’களைப் பற்றி வெளியே, வெளிப்படையாக நாம் பேசாமல் இருக்க முடியாது.

இந்த வங்கியில் ‘மொட்டை’ ஒரு சாபக்கேடு என்பதும், அதற்கென ஒரு தனி வரலாறு உண்டு என்பதும் அனைவருக்கும் தெரியும். ஆனால், பொதுவாக இந்த மொட்டைகள் குறித்த சில பார்வைகள் உண்டு.

ஒரு தவறை நேரடியாகத் தட்டிக் கேட்க முடியாமல், எதாவது ஒரு வடிவில் எதிர்ப்பைத் தெரிவிக்க விரும்புகிறவர்கள் ‘மொட்டையை’ தங்களுக்குரிய வழியாகத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள். இவர்கள் கோழைகள்.

அடுத்ததாக தங்களுக்குப் பிடிக்காதவர்களை பொதுவில் அவமானப்படுத்தவும், அசிங்கப்படுத்தவும் ‘மொட்டையை’ தேர்ந்தெடுக்கிறார்கள். இவர்கள் வக்கிரமானவர்கள்.

இன்னும் சிலர் கூடவே இருந்து ஒரு விஷயத்தை ஆதரித்துவிட்டு, யாருக்கும் தெரியாமல் அதனை எதிர்ப்பதற்கு ‘மொட்டையை’ பயன்படுத்துகிறார்கள். இவர்கள் துரோகிகள்.

மொட்டைகளின் காணப்படும் விஷயங்களைப் பொறுத்து அவர்கள் கோழைகளா, வக்கிரமானவர்களா அல்லது துரோகிகளா என்பதை அறிய முடியும். எது எப்படியானாலும் நேர்மையானவர்கள், நிமிர்ந்து நிற்கிறவர்கள் ‘மொட்டை’ போடும் காரியத்தைச் செய்ய மாட்டார்கள்.

வரலாற்றைத் திருப்பிப் பார்த்தால் இந்த வங்கியில், அதிகமாக மொட்டை வந்த காலங்கள் புரியும். எப்போதெல்லாம் வங்கியின் உயர் பொறுப்பில் இருப்பவர்கள் தங்கள் அருகில் குறிப்பிட்ட சிலரை வைத்துக் கொண்டு அவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதும், அவர்களை கலந்து முடிவெடுப்பதும்,அவர்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதும் நடக்கிறதோ, அப்போதெல்லாம் ‘மொட்டை’களின் வரத்து அதிகமாகிறது.

அதுபோல எப்போதெல்லாம், வங்கியின் உயர் பொறுப்பில் இருப்பவர்கள் எந்தக் குறிப்பிட்ட சிலரையும் தங்கள் அருகில் வைத்துக் கொள்ளாமல், சகலரிடமும் சம தூரத்தையும், சம நெருக்கத்தையும் காட்டுகிறார்களோ அப்போது ‘மொட்டைகள்’ காணாமல் போய்விடுகின்றன.

ஆக, மொட்டைகளை வரவைப்பதும், வரவிடாமல் தடுப்பதும் வங்கியின் உயர்பொறுப்பில் இருப்பவர்களின் கைகளில்தான் இருக்கின்றன. மொட்டைகளின் ராஜ்ஜியத்தை நிர்மூலமாக்கும் சாமர்த்தியம் இதுதான்!

அதைவிடுத்து மொட்டையைப் பார்த்து புலம்புவதும், வேதனைப் படுவதும் பிறகு அதிலேயே குளிர் காய்வதும் காரியசித்தி ஆகாது!
Read more...

AIRRBEA agenda Notes for JCC meeting on 24.09.2014

0 comments

இன்று மும்பையில் நமது AIIRBEA தலைவர்கள் கிராம வங்கி ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் பிரச்சினை குறித்து, Joint Consultative Committeeயுடன் பேசுகிறார்கள். அப்போது அவர்கள் முன் வைத்துப் பேச இருக்கும் விஷயங்களை இங்கு தருகிறோம். கிராம வங்கி ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் பிரச்சினைகளில் எவ்வளவு அக்கறையும், தெளிவும் நமது AIRRBEAவுக்கு இருக்கிறது என்பதை இந்த அஜெண்டாவே சொல்லும்!

-----------------------------------------------------------------------------------------------------------------
1. Though the matter of 'Pension Parity' sub-judice and pending before the Hon’ble Supreme Court, it may be noted that the issue can be settled by withdrawal of the SLP by the DFS, MOF, GOI in view of the fact that Hon’ble Finance Minister approved, long back on 20-06-2012 ‘in principle’ Parity of Pension in line with the scheme implemented in Banking Industry in terms of settlement dated 29-10-1993.

2. Continuing the scheme for appointments on compassionate grounds in RRBs as being done in case of other commercial banks – GOI order dated 07-08-2014 to IBA.

3. Office Assistants and Office Attendants who have completed 20 years of service in the same cadre should be promoted to next higher cadre as one time measure. Graduate messenger should be allowed automatic promotion to Clerical Cadre as done in Sponsor Banks.

4.  Messenger/sweepers working on daily wages/casual for long period may be regularized by absorbing against the vacancies of Office Attendant.

5. Sanction of Computer Increment to RRB staff.

6. Graduation Increment to Office Assistant (Multipurpose) - Same norm should be followed as in case of commercial banks.

7. Posts in RRBs – In terms of NIT Award and the orders of the Hon’ble Supreme Court, posts in RRBs should be at the comparable level with that of Sponsor Bank. Hence the posts of Office Assistant (M) and Office Attendant (M) should be changed accordingly.

8. Accommodation facility and payment of Special allowance to RRB staff in remote and difficult areas.

9. Gratuity is  being calculated on the basis of Basic Pay and  DA only. But it should be calculated on the basis of Basic Pay, DA and other Allowances.

10.Grant of Special Leave to office bearers of Trade Unions to attend Trade Union works at par with practice in Banking Industry.

11. Workers participation in management – appointment of Workmen / Officer Directors in the Board of Directors in RRB.

12.  Air Travel facilities for Scale I officers while availing LFC - This should be allowed as done in case of sponsor banks/Banking Industry.

13. Staff Welfare Scheme in line with Sponsor Banks.

14. Posting of Senior Scale IV officers of RRBs as GM in case of small RRBs. In bigger RRB, Scale V/VI officers may be posted taking them from other RRBs on deputation. Posts up to Scale VI should be allowed to be filled up by promotion on the ground that branches in many RRBs have reached the business level of Scale V. This requires provision of GM of minimum level of Scale V, and Chairman of minimum level of VI.

15. Leave Encashment to the employee/officer who resigns from the service after completion 20 years of service – It should be allowed as per norms in Banking Industry.

16. Introduction of in cadre promotion i.e. senior/special assistant and Head Messenger etc. Determination of minimum qualifying marks in all written and interviews for promotional examinations may be relaxed.

17. RRB Staff Service Regulation, Recruitment cum Promotion Rules at par with Sponsor Bank. This will minimize the disputes and hazards of interpretation etc.

18. Ex – Serviceman – Service Seniority for Promotion should be allowed at par with Sponsor Bank norms.

19. All staff loans to be at par with Sponsor Bank.

20. Continuity of service to those who joins higher post in same bank - This should be allowed to render natural justice to the employees as there is a very limited scope of promotion.

21. Transfer of female employees minimizing their hardship – GOI order dated 08-08-2014 addressed to PSBs/SBI/IDBIs may please be implemented in RRBs.

22. Minor Penalty charge sheets – keeping promotion held up – fixing of time to conclude the proceedings.

23. Sabbatical leave and leave for Hysterectomy to women employees on par with commercial banks.

24. Adhering to the objectives and strength of RRB structure, the recruitments as far as possible must be from the same area of operation and it must be from the same district particularly for the clerical and sub staff cadre.
Read more...

மகத்தான தோழர்.பிச்சைமுத்து நம்மை விட்டுப் பிரிந்தார்!

4 comments

தாங்கமுடியாத வேதனையும், அதிர்ச்சியுமாக இருக்கிறது. நமது அன்பிற்குரிய தோழர்.பிச்சைமுத்துவின் காலமாகிவிட்டார்.

நேற்று மாலை வங்கிப்பணி முடித்துவிட்டு வரும்போது, விபத்திற்குள்ளாகியிருக்கிறார். மதுரை அப்பல்லோவில் அவருக்கு தீவீர சிகிச்சையளிக்கப்பட்டது. உடல்நிலையில் முன்னேற்றங்கள் இல்லாமல் இன்று மாலை அவர் மரணமடைந்து விட்டார்.

1984லிருந்து PGBEAவின் செயற்குழுவில் பங்கேற்று தொடர்ந்து சங்கப்பணி ஆற்றி, பின்னர்  PGBOUவின் தலைவராகவும், AIRRBEA-TN தலைவராகவும் பரிணமித்த அற்புதமான தோழர்.

இந்த வங்கியில் நடந்த அனைத்துப் போராட்டங்களிலும், சங்க நடவடிக்கைகளிலும் பங்கேற்ற முன்னணிப் போராளி.

முக்கிய சட்ட ரீதியான நடவடிக்கைகளை கையாண்டு, நிர்வாகத்தின் தாக்குதல்களை முறியடித்தவர். முன்னர் SACக்கு கொடுத்த ஊதியத்தை பிடித்தம் செய்ய நிர்வாகம் முனைந்தபோது அதைத் தடுத்து நிறுத்தியதிலிருந்து, சமீபத்தில் புதிய அப்ரைசர்கள் நியமனம் செய்வதை தடுத்து நிறுத்தியது வரை அவரது  பணிகள் சங்க வரலாற்றின் மைல்கற்கள்.

ஆர்ப்பாட்டங்கள் இல்லாமல் அமைதியாக காரியமாற்றும் அவரது பண்பு அரிதானது. போற்றுதலுக்குரியது.

எந்த நிலையிலும் தடுமாற்றங்கள் கொள்ளாத, சமரசம் செய்துகொள்ளாத, இடதுசாரிக் கொள்கையில் ஆழமான பிடிப்பு கொண்ட முற்போக்குவாதி.

புத்தகங்களிலும், இணையத்திலும் தொடர்ந்து வாசித்து அறிந்து அதன்மூலம் தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறவர்.

எளிமையும், இனிமையும் அவரது தனிச்சிறப்பு.

42-பி எல்.எப் தெருவில் இருந்த சங்க அலுவலகத்திலிருந்து நினைவுகள் நீண்ட பயணமாய்  அழைத்துச் செல்கின்றன. 24.8.2014 அன்று திருச்சியில் நடந்த AIRRBEA-TN மாநிலக்குழு கூட்டத்தில் அவர் பங்கேற்றது வரை காட்சிகள் அலைக்கழிக்கின்றன. கண்ணீர் பெருக்கெடுக்கிறது.

தோழரே!
வாழ்வின் துயரமான, வலிமிகுந்த தருணம் இது!
இருந்த இடம் தெரியாமல் நீங்கள் இருந்தாலும், உங்கள் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது!!
உங்களுக்கு எங்கள் அஞ்சலி!(நாளை - 14.9.2014 -  காலை 10 மணியளவில் காரைக்குடியில் தோழர்.பிச்சைமுத்து அவர்களின் இறுதிச்சடங்கு நடைபெறும்.)
Read more...

Business Hours in RRBs: Are we exploited?

5 comments

கடந்த சில ஆண்டுகளாகவே, நமது பாண்டியன் கிராம வங்கியில், business hours என்பது கிளைகளில் 10 A.M - 4 P.M  என மாற்றப்பட்டு, மாலை 4 மணி வரை கிளைகளில் கேஷ் வாங்கிக்கொண்டு இருக்கிறோம்.

ஆனால், RBI யிலிருந்து 12.5.2014 அன்று அனைத்து RRB களுக்கும் அனுப்பப்பட்டு இருக்கிற-
RBI/2013-14/589 RPCD.CO.RRB.BC.No.100 / 03.05.33/2013-14 
என்னும் சர்க்குலரில், வார நாட்களில் business hours  4 மணி நேரமும், சனிக்கிழமையில் 2 மணி நேரமும் இருக்க வேண்டும் என தெளிவாகச் சொல்லப்பட்டு இருக்கிறது.

அதாவது காலை 10 மணிக்கு business hours  என்றால், பிறபகல் 2 மணி வரைக்கும் தான் business hours.  அதுவரைதான் கேஷ் வாங்க வேண்டும்.

அந்த சர்க்குலரிலேயே, இன்னொரு விஷயமும் மிகத் தெளிவாகச் சொல்லப்பட்டு இருக்கிறது.

தேவைப்பட்டால், இந்த business hoursஐ கிராம வங்கிகள் அதிகரித்துக் கொள்ளலாம். ஆனால் அந்த சமயத்தில் ’non-cash banking transactions’  தான் பார்க்க வேண்டும். அதுவும் என்னென்ன என்பதும் தெளிவாக வரையறுக்கப்பட்டு உள்ளது.

தோழர்களுக்கு அந்த சர்க்குலரின் குறிப்பிட்ட பகுதியை அப்படியே இங்கு தருகிறோம்.

5. Service at the counters 

5.1 Banking hours / working days of RRB branches 
RRBs should normally function for public transactions at least for 4 hours on week days and 2 hours on Saturdays in the larger interest of public and trading community. Extension counters, Satellite Offices, one man offices or other special class of branches may remain open for such shorter hours as may be considered necessary. 
5.2 Commencement / Extension of working hours 
Commencement of employees’ working hours 15 minutes before commencement of business hours could be made operative by RRBs at branches in metropolitan and urban centres. The RRBs should implement the recommendation taking into account the provisions of the local Shops and Establishments Act. 
The branch managers and other supervising officials should, however, ensure that the members of the staff are available at their respective counters right from the commencement of banking hours and throughout the prescribed business hours so that there may not be any grounds for customers to make complaints.

RRBs should ensure that no counter remains unattended during the business hours and uninterrupted service is rendered to the customers. Further, the RRBs should allocate the work in such a way that no Teller counter is closed during the banking hours at their branches.
All the customers entering the banking hall before the close of business hours should be attended to. 
5.3 Extended business hours for non-cash banking transactions 
RRBs should extend business hours for banking transactions other than cash, up till one hour before close of the working hours.
The following non-cash transactions should be undertaken by banks during the extended hours, i.e., up to one hour before the close of working hours: 
(a) Non-voucher generating transactions : 
i. Issue of pass books/statement of accounts;
ii. Issue of cheque books;
iii. Delivery of term deposit receipts/drafts;
iv. Acceptance of share application forms;
v. Acceptance of clearing cheques;
vi. Acceptance of bills for collection. 
(b) Voucher generating transactions: 
i. Issue of term deposit receipts;
ii. Acceptance of cheques for locker rent due;
iii. Issue of travellers cheques;
iv. Issue of gift cheques;
v. Acceptance of individual cheques for transfer credit. 
Such non-cash transactions to be done during the extended business hours should be notified adequately for information of the customers. 
RRBs can have evening counters at the premises of existing branches in urban/metropolitan centres for providing facilities to the public beyond the normal hours of business so as to bring about improvement in customer service. It is necessary that in such cases the transactions conducted during such extended hours of business are merged with the main accounts of the branch where it is decided to provide the aforesaid facilities. 
The concerned RRBs should give to their constituents due notice about the functions to be undertaken during the extended banking hours through local newspapers, as also by displaying a notice on the notice board at the branch(es) concerned. Further, as and when the hours of business of any of the branches are extended, the concerned clearing house should be informed. 

ரிசர்வ் வங்கியிலிருந்து வெளியிடப்பட்டுள்ள அந்த சர்க்குலரை முழுமையாக படிக்க இங்கே செல்லுங்கள்;

http://rbidocs.rbi.org.in/rdocs/notification/PDFs/FCRB1205014F.pdf

இப்படி நாம் customer service  செய்ய என்னென்ன வசதிகள் எல்லாம் நமக்கு செய்து தரப்பட வேண்டும் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்!
Read more...

All Trade Unions in PGB - Gate Meeting on 27.8.2014

1 comments
பாண்டியன் கிராம வங்கி நிர்வாகத்தின் அணுகுமுறையும், செயல்பாடுகளும் மிக மோசமான நிலையில் இருக்கிறது.

2013ம் ஆண்டில் அடையாளம் காணப்பட்ட காலியிடங்களுக்கு இன்னும் பிரமோஷன் அறிவிக்கப்படவே இல்லை.

2014ம் ஆண்டில் ஏப்ரல், மே மாதங்களில் போடப்பட்டு இருக்க வேண்டிய ஜென்ரல் டிரான்ஸ்பர்கள் இன்னும் போடப்படவில்லை.

2013ம் ஆண்டு ஜூன் மாதத்தில் பணிக்குச் சேர்ந்த புதிய ஊழியர்களுக்கு இன்னும் கன்பர்மேஷன் கொடுக்கப்படவில்லை.

பலருக்கு வருடக்கணக்கில் Leave regularize  செய்யப்படவில்லை.

இப்படி Personnel Administration Department நிலைமை இருக்கிறது.

ஒழுங்கு நடவடிக்கைகள் முடிவுற்று, பலருடைய அப்பீல்கள் வருடக்கணக்கில் கவனிக்கப்படவில்லை.

Final orderகளுக்காகவும், Findingsக்காகவும் பலருடைய Fileகள் காத்துக் கிடக்கின்றன.

பணியில் இருக்கும்போதெல்லாம் விட்டுவிட்டு, ஓய்வு பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் சார்ஜ் ஷீட் கொடுக்கப்படுகிறது.

தேவையில்லாமல், வேண்டுமென்றே குற்றச்சாட்டுக்கள் சுமத்தி, Fileஐ create செய்துவிட்டு அதை வருடக்கணக்கில் தீர்க்காமல் அப்படியே வைத்திருப்பது வாடிக்கையாகவும், வழக்கமாகவும் இருக்கிறது.

இப்படி Inspection Departmentன் நிலைமை இருக்கிறது.

காலதாமதமும், ஊழியர் நலனில் மெத்தனமும், ஊழியர்களை அடிமைகளாக பாவிக்கும் ஆணவமும் மண்டிக்கிடக்கிற இடமாக தலைமையலுவலகம் சிதைந்து போயிருக்கிறது.

அனைத்துத் தரப்பு ஊழியர்களும், அலுவலர்களும் கடும் எரிச்சலும், விரக்தியும் அடைந்து வருகின்றனர். வங்கிக்கும், இங்கு பணிபுரிபவர்களுக்கும் இந்த அணுகுமுறை நல்லதல்ல என்பதுதான் எல்லோரின் கருத்தாக உருவெடுத்திருக்கிறது.

இந்த இரு துறைகள் குறித்து வருடக்கணக்கில் சங்கங்கள் நிர்வாகத்துடன் பேசியும், அதிருப்தி தெரிவித்தும் வந்திருக்கின்றன.

இந்த Attitudeக்கும், Approachக்கும் காரணமானவர்களை அப்புறப்படுத்தி விட்டு, புதிய சிந்தனைகளும், நட்பும் மனிதாபிமானமும் கொண்ட அதிகாரிகளை தலைமையலுவலகத்தில் பணியாற்ற ஏற்பாடுகள் செய்வதுதான், தலைமையலுவலகத்தில் மாற்ற்ம்’ கொண்டு வருவதன் முதல் படியாக இருக்கும் என சங்கங்கள் கோரிக்கை வைத்தன.

நம்முடைய கருத்துக்களை ஆமோதிக்கிற நிர்வாகம், ஆனால் சரி செய்ய மட்டும் முன்வர மாட்டேன்கிறது.

எனவே, பாண்டியன் கிராம வங்கியில் இருக்கும் அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து, ‘தமைமையலுவலகத்திலிருந்து மாற்றம்’ கொண்டு வர தொடர்ந்து இயக்கம் நடத்துவது என முடிவு செய்திருக்கின்றன.

அதன் முதல் கட்டமாக, 27.8.2014 அன்று மாலை தலைமையலுவலகத்தில் வாயிற்கூட்டம் நடத்தப்பட்டது. பாண்டியன் கிராம வங்கியில், தொழிற்சங்க இயக்கத்தில் அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து நிற்கும் மிக முக்கியமான அத்தியாயம் இதன் மூலம் ஆரம்பமாகி இருக்கிறது.

கடுமையான ஆள் பற்றாக்குறை, 4 மணி வரை கிளையில் வரவு செலவு பார்க்க வேண்டிய நிலை, தொலைதூரத்தில் கிளைகள் திறக்கப்பட்ட சூழலையும் தாண்டி ஏறத்தாழ 200 தோழர்கள் இந்த வாயிற்கூட்டத்திற்கு வந்திருந்தனர்.

உற்சாகமும், எழுச்சியும் மிக்க இந்த வாயிற்கூட்டத்தை, PGBWUவின் AGS தோழர்.அருண்பிரகாஷ் சிங் தனது ஆக்ரோஷமான கோஷங்களால் துவக்கி வைத்தார்.

PGBWUவின் தலைவர், தோழர்.பாலசுப்பிரமணியன் வாயிற்கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். PGBSEWA பொதுச்செயலாளர் தோழர்.ராஜேந்திர சோழன் பேசினார். PGBOUவிலிருந்து தோழர்கள் போஸ் பாண்டியன், சாமுவேல் ஜோதிக்குமார், டி.கிருஷ்ணன், சங்கரலிங்கம் ஆகியோர் பேசினார்கள். PGBOAவிலிருந்து தோழர்கள் குழந்தைவேலு, அருணாச்சலராஜன், இலக்குவன் ஆகியோர் பேசினார்கள். PGBWUவிலிருந்து தோழர்கள் பாலாஜி பாலகிருஷ்ணன், மாதவராஜ் ஆகியோர் பேசினார்கள்.

நிர்வாகம் உடண்டியாக ‘தலைமையலுவலகத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும், இல்லையென்றால் வங்கியின் தொழில் அமைதி பாதிக்கப்படும், வணிகமும் பாதிக்கப்படும் அளவுக்கு கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டி இருக்கும் என தொழிற்சங்கத் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.

வாயிற்கூட்டம் முடிந்ததும், வங்கியின் சேர்மனை சந்தித்து, மெமொரெண்டம் கொடுக்கப்பட்டது. ‘ஆகஸ்டு மாதத்திற்குள் தலைமையலுவலகத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும். இல்லையென்றால் போராட்ட வடிவங்கள் தீவீரமாகும்’  என்பது தெரிவிக்கப்பட்டது.
\
வரும் சனிக்கிழமை மாலை, அனைத்துத் தொழிற்சங்கத் தலைவர்கள் மீண்டும் கூடி அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை தீர்மானிப்பார்கள்.

வாயிற்கூட்டத்தின் சில காட்சிகள்:

தோழர்.அருண்பிரகாஷ்சிங் கோஷங்களோடு...

தோழர்கள்.....

தோழர்.பாலசுப்பிரமணியன் பேசுகிறார்...

தோழர்கள்...

தோழர்.ராஜேந்திர சோழன் பேசுகிறார்...

தோழர்.போஸ் பாண்டியன் பேசுகிறார்...

தோழர்கள்...

தோழர்.அருணாச்சலராஜன் பேசுகிறார்...

தோழர்.டி.கிருஷ்ணன் பேசுகிறார்...

தோழர்.குழந்தைவேலு பேசுகிறார்...

தோழர்.சாமுவேல் ஜோதிக்குமார் பேசுகிறார்...

தோழர்.பாலாஜி பாலகிருஷ்ணன் பேசுகிறார்...

தோழர்.பாலாஜி பாலகிருஷ்ணன் பேசுகிறார்...

தோழர்.சங்கரலிங்கம் பேசுகிறார்...

தோழர்.இலக்குவன் பேசுகிறார்...

தோழர்.மாதவராஜ் பேசுகிறார்...

தோழர்கள்...

தோழர்கள்...

தோழர்.மாதவராஜ் பேசுகிறார்...
Read more...

புதிய செயற்குழுவின் முதல் கூட்டம்!

6 comments

இணைப்பு மாநாட்டிற்கு பிறகு, PGBWUவின் முதல் செயற்குழுக் கூட்டம் குற்றாலத்தில், 27.7.2014 அன்று நடந்தது.

அகில இந்தியச் செய்திகள், ஊழியர்களின் பிரச்சினைகள், டிரான்ஸ்பர்கள், நிர்வாகத்தின் ஒழுங்கு நடவடிக்கைகள், சட்ட ரீதியான நடவடிக்கைகள், சங்கத்தின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதற்கான  குழுக்கள் அமைத்தல் போன்ற விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.


சுகமான சாரல் காற்று வீசிக்கொண்டு இருந்தாலும், செயற்குழுக் கூட்டம் நடந்த அறையில் , நமது ஊழியர்கள் இன்று வங்கியில் சந்தித்துக்கொண்டு இருக்கும் பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்கும் போது வெப்பம் மெல்ல பரவ ஆரம்பித்தது.

நமது சங்கத்தை அங்கீகாரம் செய்ய வேண்டும் என்பதும் தலைமையலுவலகத்தில், மண்டல அலுவலகங்களில் நமது சங்கத்தின் பிரதிநித்துவம் வேண்டும் என்பதும் முதற் கோரிக்கையாக உருவெடுத்தது. தொலைதூரக் கிளைகளில் அவதிப்படும் தோழர்கள் அருகாமைக்கு கொண்டு வரவேண்டியது சங்கத்தின் முக்கிய கடமையாக தீர்மானிக்கப்பட்டது. கிளைகளில் பணிபுரிவதற்கான ஆரோக்கியமான சூழலை இந்த வங்கியில் உடனடியாக ஏற்படுத்த வேண்டிய அவசியம் உணரப்பட்டது. இந்த வருடம் நடைபெற வேண்டிய பிரமோஷனுக்கான அறிவிப்புகள் இன்னும் வெளியிடப்படாததற்கு அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. ஊழியர்களின் duties and responsibilities ஐ வரையறுக்கப்பட வேண்டியது உடனடித் தேவை என செயற்குழு கருதியது. PAD- SM  மற்றும்  AIVD- SM களின் நடவடிக்கைகளில், செயல்பாடுகளில் கடும் விமர்சனங்கள் எழுந்தன.

இவைகளின் அடிப்படையில் ஒரு கோரிக்கைகளின் பட்டியல் தீர்மானிக்கப்பட்டது. வரும் வியாழக்கிழமை 31.7.2014 அன்று, சேர்மனோடு இந்தக் கோரிக்கைகள் குறித்துப் பேச இருக்கிறோம்.

Regional Committee களின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என வரையறுக்கப்பட்டது. விரைவில் முக்கிய நகரங்களில், நமது சங்கத்தின் மண்டலக் கூட்டங்கள் நடத்தி, அவைகளில் உறுப்பினர்களை சந்தித்து, நமது எதிர்கால நடவடிக்கைகளைத் தீர்மானிக்க இருக்கிறோம்.

விரிவான சுற்றறிக்கை விரைவில்....
Read more...

இணைப்பு மாநாட்டின் சிறப்பு உரைகள்!

0 comments

13.7.2014ல்  திருநெல்வேலியில் நடந்த PGBEA - PGBWU இணைப்பு மாநாட்டில் தலைவர்கள் பேசிய வீடியோக் காட்சிகள்:(பொதுச்செயலாளர் தோழர். மாதவராஜ்)(தலைவர் தோழர்.பாலசுப்பிரமணியன்)
Read more...

PGBEA - PGBWU இணைப்பு மாநாடு!

1 comments
13.7.2014,!
ஞாயிற்றுக்கிழமை!!

 நமது தொழிற்சங்க இயக்க வரலாற்றில் மிக முக்கியமான நாளாகி விட்டிருந்தது. மாநாடு நடந்த ‘ஆரியாஸ் மஹாலின்’ ஒவ்வொரு பகுதியிலும் சந்தோஷமும், நட்பும் ததும்பி இருந்தது. ஏக்கங்கள் எல்லாம் கலைந்து, ஒரு கனவு மெய்ப்பட்ட சிலிர்ப்போடு தோழர்கள் அனைவரும் காணப்பட்டனர். ’ஒற்றுமையின் திருவிழாவாக’ நடந்த நம் இணைப்பு மாநாடு அதற்குரிய எழுச்சியோடு விளங்கியது. நானூறுக்கும் மேற்பட்ட தோழர்கள் நிறைந்த அந்த மாபெரும் சபையில் 2008க்குப் பிறகு பணிக்குச் சேர்ந்த தோழர்கள் அதிகமாக கலந்துகொண்டு உற்சகாகமாக இருந்தனர். அவர்களே இந்த மாநாட்டின் அர்த்தமாகத் திகழ்ந்தனர். எதிர்காலம் நம்பிக்கையோடு தெரிந்தது.

மாநாட்டிற்கு  தோழர்.S.பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். தோழர்.S.சங்கரசீனிவாசன் முன்னிலை வகித்தார். நமது அழைப்பை ஏற்று வங்கியின் சேர்மன் திரு.கார்த்திகேயன், பொதுமேலாளர் திரு.ராமசுப்பு ஆகியோர் வந்திருந்தனர். AIRRBEAவின் அகில இந்தியத் தலைவர்கள் தோழர்.வெங்கடேஷ்வரரெட்டி, தோழர் நாகபூஷண்ராவ் ஆகியோரும்,  AIRRBEA-TN ஆலோசகரும், BEFI -TN மாநிலப் பொதுச்செயலாளருமான தோழர். சி.பி.கிருஷ்ணன் மற்றும் AIRRBEA-TN தலைவர் தோழர்.டி.கிருஷ்ணனும் வந்திருந்தனர். மேலும் நமது சகோதரத் தொழிற்சங்கங்களின் சார்பில் நமது அழைப்பை ஏற்று தோழர்.சங்கரலிங்கம் (GS - PGBOU), தோழர்.போஸ்பாண்டியன் (Vice President - PGBOU), தோழர்.இலக்குவன் (GS - PGBOA), தோழர்.ஐ.சுப்பிரமணியன் (President - PGBOA), தோழர்.ராஜேந்திரசோழன் (GS - PGBSEWA) ஆகியோரும் வந்திருந்தனர். இணைப்பு குறித்து பேசுவதற்கு தோழர்.மாதவராஜும் தோழர்.பாலாஜி பாலகிருஷ்ணனும் இருந்தனர். அனைவரையும் தோழர்.விவேகானந்தன் வரவேற்று மேடையில் வந்து அமருமாறு அழைப்பு விடுத்தார்.


மாநாட்டின் சில காட்சிகள்...

(மாநாட்டில் புகைப்படம் எடுத்த போட்டோகிராபர் தந்த புகைப்படங்கள் இவை. பல காட்சிகள் விடுபட்டிருக்கலாம். மன்னிக்கவும்.)

உற்சாகத்தோடு தோழர்கள் மாதவ்ராஜ், பாலசுப்பிரமணியம், சி.பி.கிருஷ்ணன்

நம் தோழர்கள்

இணைப்புத் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன

நம் தோழர்கள்

தோழர். ஐ.சுப்பிரமணியம் வாழ்த்துகிறார்

தோழர்.போஸ்பாண்டியன் வாழ்த்துகிறார்

நம் தோழர்கள்

தோழர்.மாதவராஜ் இனைப்பு குறித்து.....

நம் தோழர்கள்

தோழர்.பாலசுப்பிரமணியன் இணைப்பு குறித்து.....

தோழர்.சி.பி.கிருஷ்ணன் வழிகாட்டுகிறார்

தோழர்.நாகபூஷண்ராவ், AIRRBEA குறித்து விளக்குகிறார்

தோழர்.வெங்கடேஸ்வரரெட்டி, AIRRBEA வில் இணைந்தமைக்கு பாராட்டுகிறார்

நம் தோழர்கள்

சேர்மன் திரு.கார்த்திகேயன் வாழ்த்துகிறார்!

நம் தோழர்கள்!

பத்திரிகையாளர் சந்திப்பில் தோழர்கள் பாலசுப்பிரம்ணியன், மாதவராஜ்


Read more...
 
PGBWU © 2014 | Designed By Blogger Templates